உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, உலக சுகாதார நிறுவனம் சர்வதேச சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.
ஆப்பிரிக்காவுக்கு வெளியேயும் பரவி வரும் குரங்கம்மை நோய், சமீபத்தில் தங்கள் நாட்டில் எம்பாக்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக ஸ்வீடன் அறிவித்தது. இந்த வைரஸ், க்ளேட் 1-இன் திரிபு என அடையாளம் காணப்பட்டது.
பாகிஸ்தானில் இதுவரை மூன்று பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்தவர்கள் என்று வடக்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் இதுவரை மூன்று பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்தவர்கள் என்று வடக்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.
இந்தியாவில் கடந்த காலங்களில் குரங்கம்மை நோய் பாதிப்ப இருந்துள்ளது. ஆனாலும், தற்போது இதுவரை ஒருவருக்கு கூட அதன் பாதிப்பு கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு முன் உலகம் முழுவதும் குரங்கம்மை பரவிய போது, இந்தியாவிலும் சிலர் பாதிக்கப்பட்டனர். இந்தியாவிலும் குரங்கம்மை பாதிப்பு ஏற்படக் கூடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
எம்பாக்ஸ் நேரடி தொடர்பு மூலமாகவோ அல்லது வாய் அல்லது பிறப்புறுப்பில் உள்ள தோல் புண்கள் மூலமாகவோ ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



