இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் ஆணவத்துடன் இருப்பது வேதனையளிக்கின்றது – சி.மகேந்திரன்

87 Views

முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்று அதில் இலட்சக்கணக்கான மக்கள் இறந்தபின்னரும் இலங்கை அரசாங்கம் ஆணவத்துடன் இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக கம்னியூஸ் கட்சியின் தமிழகத் தலைவர் சி.மகேந்திரன் கவலை வெளியிட்டுள்ளார்.

தற்காலிக நடைமுறையாக 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இதற்கு இந்திய அரசாங்கம் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

13ஆவது திருத்ததின் படி, முழுமயான அதிகார பரவலாக்கத்தை நடைமுறைப்படுத்த தமிழகத் தலைவர்கள் மூலமாக மாநில, மத்திய அரசாங்கங்களை கோரும் விசேட மாநாடொன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டின் பின்னர் சென்னை பத்திரிகையாளர் மன்றில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply