உலகின் எரிபொருள் வர்த்தகத்தை மாற்றி எழுதும் சீனா

135 Views

உலகின் எரிபொருள் வர்த்தகத்தை மறுசீரமைப்பதில் சீனா தீவிர கவனம் செலுத்திவருகின்றது. அமெரிக்க டொலரை தவிர்த்து அந்த நாடுகளின் நாணயத்தில் வர்த்தகத்தை மேற்கொள்ளும் முயற்சிகளை அது தீவிரப்படுத்தி வருகின்றது.

ரஸ்யாவுடன் ரூபிள் மற்றும் யூவானில் வர்த்தகத்தை மேற்கொண்டுவரும் சீனா தற்போது மத்திய கிழக்கு நாடுகளுடனான எரிபொருள் வினியோகத்தையும் யூவானில் மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கிறடிற் சூசி நிறுவனத்தின் ஆய்வாளர் சொல்ரன் பொசார் தெரிவித்துள்ளார்.

ஈரான், வெனிசுலா, ரஸ்யா மற்றும் ஆபிரிக்கா நாடுகளில் இருந்து சீனா மசகு எண்ணை மற்றும் எரிவாயுக்களை கொள்வனவு செய்து வருகின்றது. கடந்த டிசம்பர் மாதம் அரபு நாடுகளின் கூட்டமைப்புடன் சீனா அதிபர் ஜி ஜின்பிங் மேற்கொண்ட பேச்சுக்களின் போது பெற்றோயூவான் வர்த்தகம் தொடர்பில் பேசியிருந்தார்.

யூவானில் வர்த்தகத்தை மேற்கொள்ள சீனா தயாரா இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது சீனா உலகின் எரிபொருள் வர்த்தக நடைமுறையை மாற்றி எழுத முற்படுகின்றது. பிறிக்ஸ் கூட்டமைப்பும் டொலரை தமது வியாபாரத்தில் தவிர்க்க முற்பட்டுள்ளது.

உக்ரைன் போரை தொடர்ந்து அமெரிக்கா மேற்கொண்ட தடைகளே எண்ணை வர்த்தகர்கள் மற்றும் நாடுகள் டொலரை தவிர்ப்பதற்கான உந்துசக்தியாக அமைந்துள்ளது பொசார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply