கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 86 ஆவது நாள் போராட்டம்

96 Views

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 86 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னார்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெள்ளாங்குளம் பகுதியில் இடம்பெற்றது.

இதன்போது பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு வெள்ளாங்குளம் பகுதியில் ஊர்வலத்தை முன்னெடுத்த மக்கள், பிரதான வீதிக்கு அருகில் நின்று தமது கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர்.

குறித்த 100 நாள் செயல் முனைவின் 86 ஆம் நாள் போராட்டத்தில் வெள்ளாங்குளம் கிராமத்தில் உள்ள பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply