தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 3 ஆவது வரவு – செலவுத் திட்டம்

பாராளுமன்றில் வரும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (12)  நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  முன்வைத்து உரையை ஆரம்பித்துள்ளார்.

2026ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு ரூ. 4,050 கோடியால் அதிகரிப்பு.

– ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுகள் மற்றும் ஜனாதிபதி செயலகச் செலவுகளுக்கு மொத்தமாக ரூ. 1,35,205.68 கோடி ஒதுக்கீடு.

– ஜனாதிபதிக்கான செலவீனம் ரூ. 1,120.38 கோடி.

– பிரதமருக்கான செலவீனம் ரூ. 102.21 கோடி.

– நாட்டின் மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை முழுமையாக பாதுகாத்துள்ளோம்.

– பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளெழும் திட்டங்களுடன் அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்.சிறந்த சமூகத்தை       உருவாக்குவது வரவு – செலவுத் திட்டத்தின் பிரதான இலட்சியமாகும்.

– அரச நிதியை சேகரிப்பது மாத்திரம் எமது பொறுப்பல்ல ஒவ்வொரு ரூபாவுக்கும் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும்.அதுவே எமது இலக்கு.

– நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, இலக்கு, பூகோள தாக்கம் மற்றும் சாதக,பாதக காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

– எதிர்கால சவால்களை வெற்றி கொள்ளும் வகையில் முன்மொழிவுகள் பல்வேறு தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளன.

– பொருளாதார பரிமாற்றம் – நிலையான அபிவிருத்தி 2027 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்தின் பிரதான இலக்காகும்.

– 07 பிரதான மூலோபாய திட்டங்களை உள்ளடக்கிய வகையில் வரவு –  செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

– பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நாட்டு மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் தியாகத்துக்கு சலுகை பெற்றுக் கொடுப்பேன்.

– பேரண்டப் பொருளாதாரம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த நாணயக் கொள்கை வலுவானதாகவே பேணப்படும்.

– வெளிநாட்டு கையிருப்பில் முன்னேற்றகரமான தன்மை இல்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

– 2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மீண்டெழும் செலவுகளுக்காக 2000 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

– சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் செயற்திட்டம் எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்ததுடன் நிறைவடையும்.

– செயல்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நிதி பிரதி அமைச்சர் தலைமையில் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

– பழைய சட்டங்களை வைத்துக் கொண்டு புதிய பொருளாதார பரிமாற்றத்தை அடைய முடியாது.

– பொருளாதாரம் மற்றும் நிதி கட்டமைப்புடன் தொடர்புடைய சகல சட்டங்களும் திருத்தப்படும்,புதிய சட்டங்கள் இயற்றப்படும்.அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

– நுண்கடன் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிப்பதற்கும் கடன் திட்ட நடவடிக்கைகளை

கண்காணிப்பதற்கும் எதிர்வரும் ஆண்டின் முதல் காலப்பகுதியில் நுண்கடன் கண்காணிப்பு நிறுவனம் ஸ்தாபிக்கப்படும்.

– சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

– அரச முதலீட்டை மொத்த தேசிய உற்பத்தியில் 14 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானம்.