வரவு செலவு திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி

2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட யோசனைகளுக்கு இன்று (12) கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

இதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று பிற்பகல் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட யோசனைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இன்று பிற்பகல் 1.30 க்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், இதன்போது ஜனாதிபதியினால் 2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு (வரவு – செலவுத் திட்ட உரை) நிகழ்த்தப்படவுள்ளது.