சிறீலங்கா அரச தலைவருக்கு உள்ள அதிகாரங்களை குறைக்கும் 19 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக 20 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவரப்போவதாக சிறீலங்காவின் நீதி அமைச்சர் அலி சப்றி தெரிவித்துள்ளார்.
அடுத்தமாத நடுப்பகுதியில் இதனை முன்வைக்கவுள்ளேன். அமைச்சர்களின் முடிவின் பின்னர் அது இறுதி செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு மகிந்தா ராஜபக்சாவை பதவியில் இருந்து அகற்றிய பின்னர் 19 ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.