நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) ஞாயிற்றுக்கிழமை மோதலை தொடர்ந்து, இன்றும் அங்கு அசாதாரணமான மற்றும் பதற்றமான சூழல் நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்தச் சென்ற 12 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உடனடியாக நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வான்நோக்கி துப்பாக்கிச் சூடு: சிறைச்சாலைக்குள் கைதிகளின் வன்முறை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கட்டுக்கடங்காத நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.



