டென்னிஸ் வீரர் ஜொக்கோவிச்சின் விசா இரத்துச் செய்யப்படுவதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் அறிவிப்பு

52 Views

ஜொக்கோவிச்சின் விசா இரத்து

ஜொக்கோவிச்சின் விசா இரத்து: டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கான விசா இரண்டாவது முறையாக இரத்து செய்யப்பட்ட பின்னர் அவர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக டென்னிஸ் வீரர் ஜொக்கோவிச்சின் விசாவை இரத்துச் செய்வதாக குடிவரவு அமைச்சர் Alex Hawke அறிவித்துள்ளார்.

குடிவரவு அமைச்சராக தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இச்செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் Alex Hawke தெரிவித்துள்ளார்.

செர்பிய டென்னிஸ் வீரர் நொவொக் ஜொக்கோவிச்சின் அவுஸ்திரேலிய விசா இரத்துசெய்யப்பட்டமைக்கு எதிராக அவர் தொடர்ந்த வழக்கில் வெற்றிபெற்றிருந்த நிலையில், தற்போது  அவுஸ்திரேலிய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அவர், பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று அதற்கு ஆஸ்திரேலிய அரசு காரணம் கூறியுள்ளது.

Leave a Reply