இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,68,833 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   கடந்த 24 மணி நேரத்தில் 4,631 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,041 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே போல கடந்த 24 மணி நேரத்தில் 402 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,85,752 ஆக உயர்ந்துள்ளது என இந்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தியாவில் மொத்தம் 14,17,820 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதுவரை இந்தியாவில் 156.02 கோடி  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றும் இந்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

Leave a Reply