இலங்கையில் வரி அதிகரிப்பு – சர்வதேச நாணயநிதியம் கருத்து

இலங்கையில்  கடும் எதிர்ப்பை சந்தித்துள்ள புதிய வரிகளை சர்வதேச நாணயநிதியம் நியாயப்படுத்தியுள்ளது.

தற்போதைய நெருக்கடிக்கு பல காரணங்கள் உள்ளன  என தெரிவித்துள்ள சர்வதேச நாணயநிதியம் வரிகள் மூலம் அரசாங்கத்தினால் தனது செலவீனங்களை சமாளிக்க முடியாததும் ஒரு காரணம் என குறிப்பிட்டுள்ளது.

உரிய வரிகள் மூலம் மாத்திரம் அரசாங்கத்தினால் தனது செலவீனங்களிற்கான நிதியை பெற்றுக்கொள்ளமுடியும் என சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான வதி விடப்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

சமநிலையை தவிர்ப்பதற்கு வரிசீர்திருத்தங்க்ள அவசியம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரிகள் மூலம் மாத்திரம் அரசாங்கத்தினால் செலவீனங்களிற்கான நிதியை பெற முடியும் இந்த முக்கியமான சீர்திருத்தங்கள் மூலம்கடன் வழங்கியவர்களின் நம்பிக்கையை மீளப்பெறமுடியும்  என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வரிவருமானங்களை அதிகரிப்பதற்கான முயற்சிகளை வறியவர்கள் நலிந்த நிலையில் உள்ளவர்களை பாதுகாத்தவண்ணம் முன்னெடுக்கவேண்டும் எனவும் சர்வதேச நாணயநிதியத்தின்  இலங்கைக்கான பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.