பிரித்தானிய மாநில வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகார அமைச்சரை சந்தித்து பேசியது கூட்டமைப்பு

343 Views

தாரிக் அகமது - சுமந்திரன் சந்திப்பு

தாரிக் அகமது – சுமந்திரன் சந்திப்பு: பிரித்தானிய மாநில வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகார அமைச்சர் லோர்ட் தாரிக்கிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான M.A சுமந்திரனும், இரா.சாணக்கியனும் சந்தித்து பேசியுள்ளனர்.

Tariq Ahmad, Baron Ahmad of Wimbledon - Wikipediaஇதன்போது தமிழ் பேசும் மக்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் மீதான தற்போதைய அரசாங்கத்தின் தாக்குதல்கள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அரசியலமைப்பு மற்றும் தற்போதைய சில சட்ட நடவடிக்கைகளை திருத்த வேண்டியதன் அவசியம் போன்ற பல விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,இந்த இராஜதந்திர விஜயமானது தமிழ் மக்களின் பிரச்சனையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதும், எமக்கான உரிமையினை மிக விரைவில் பெறக்கூடிய வழிமுறைகளை ஒருங்கமைத்தலுமாகும் என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad பிரித்தானிய மாநில வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகார அமைச்சரை சந்தித்து பேசியது கூட்டமைப்பு

Leave a Reply