தமிழகம்: சட்டவிரோதமாக இலங்கை செல்ல முயன்ற தமிழ் இளைஞன் கைது

சட்டவிரோதமாக இலங்கை செல்ல

இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 25 வயதான சந்திரசேகரன், கடந்த வியாழக்கிழமை இரவு தனுஷ்கோடி கடல் வழியாக சட்டவிரோதமாக இலங்கை செல்ல முயன்றார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடல் வழியாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்று தமிழ்நாடு கடலோர காவல் குழும காவல் துறையினரிடம் பிடிபட்ட சந்திரசேகரன், இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மண்டபம் அகதி முகாமில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்திரசேகரனிடம்  காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் எப்படி இந்தியா வர முடிவு செய்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது,இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் சிலர், நபர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்திரசேகரனைத் தடுத்து வைக்கப்பட்டிருந்த  வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.”

இதன் போது தமிழ் நாட்டு மீனவர்களுடன் ஏற்பட்ட நட்பின் மூலம், தமிழகத்தில் வேலைவாய்ப்பு தேடித்தருமாறு சந்திரசேகரன் கேட்டுள்ளார். அதற்கு தமிழக மீனவர் ஒருவரும் வேலை தேடி தருவதாக உறுதியளித்துள்ளார்.

இதை நம்பி சந்திரசேகரன் தமிழ்நாட்டிற்கு விமானம் மூலம் சுற்றுலா விிசாவில் பயணம் செய்து, கடந்த நான்கு ஆண்டுகளாக இருந்து பெரும் நெருக்கடிகளைச் சந்தித்த பின் சட்டமுரணாக கடல் வழிப் பயணம் மூலம் தாயகத்திற்கு செல்ல முயன்ற போது தமிழக கடலோர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil News