தமிழ் அரசியல் கைதிகள் நிம்மதியாக உறங்குவதற்கு கூட நீங்கள் விடவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சபையில் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்“பல ஆண்டுகளாக வழக்குகள் கிடப்பில் உள்ளன தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் வாடுகின்றனர். அவர்களுக்கு சீப்பு,சோப்பு நாம் கேட்கவில்லை.அவர்கள் நிம்மதியாக படுத்து உறங்குவதற்கு ஒரு இடத்தை என்றாலும் கொடுங்கள்.
அவர்கள் உறங்குவதற்கு இடம் கூட இல்லை.அதுவும் நீதி அமைச்சருக்கு நன்றாகவே தெரியும். கொலை,கொள்ளை,செய்து விட்டு சிறையில் இருப்பவர்களுக்காக நீதி அமைச்சர் ஒரு பிரேரணையை கொண்டு வந்துள்ளார்.
நாம் இங்கு கதைப்பது இன விடுதலைக்கு ஏதோ ஒரு வகையில் போராடியவர்களை முக நூலில் பதிவிட்ட பல இளைஞர்கள் இன்றுவரை பிணை இல்லமால் இருக்கின்றனர்.இதற்கு என்ன முடிவு?
அனுராதபுர சிறையில் தமிழ் அரசியல் கைதியின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய இராஜாங்க அமைச்சரின் வழக்கு எந்த நிலையில் உள்ளது.யாருக்கும் அது பற்றி தெரியாது.அதை சபையில் தெரியப்படுத்துங்கள்.
அத்துடன் பதுளை சிறைச்சாலையில் ஈஸ்டர் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது. இதை தெரியப்படுத்துங்கள்” என்றார்