தொல். திருமாவளவன் அவர்களுடன் தமிழ் தேசியப் பேரவையினர் சந்திப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகத்தில், தொல். திருமாவளவன் அவர்களை, தமிழ் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு விஜய் அவர்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து, மாலை நடைபெற்ற இச்சந்திப்பில்,  நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கேசன்,ஜனநாயகத் தமிழரசுக் கட்சியின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ், உத்தியோகபூர்வப் பேச்சாளர் க. சுபாஸ், மற்றும்
கொள்கை பரப்புச் செயலாளர், சிரேஷ்ட சட்டத்தரணி ந. காண்டீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின்போது, இலங்கையில் தமிழர்களின் அரசியல் பிரச்சினை தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.