இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 10 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் -தூத்துக்குடியில் இருந்து வந்த மீனவர்களே முல்லைத்தீவு கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை இன்று பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதான 10 மீனவர்களையும் அவர்கள் பயணித்த விசைப்படகுடன் திருகோணமலைத் துறைமுகத்துக்கு கடற்படையினர் கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த மீனவர்கள் நாளை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.