இலங்கையில் வரலாறு காணாத வகையில் மண்ணெண்ணெய் விலை தற்போது அதிகரித்துள்ளது. இதுவரை காலமும் 87 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை, நேற்று நள்ளிரவு முதல் 340 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதன்படி, 253 ரூபா விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு என பல்வேறு பொருட்களுக்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவி வந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக பெட்ரோல், டீசலுக்கான தட்டுப்பாடு குறைவடைந்துள்ளது.
எனினும், மண்ணெண்ணெய்க்கான தட்டுப்பாடு தொடர்ந்து காணப்படுகின்றமையினால், அதை பெற்றுத் தருமாறு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.