கைக்குழந்தையுடன் தனுஷ்கோடி மணல் திட்டில்  தவித்த  தமிழ் குடும்பம்

120 Views

ஆறு மாத கைக்குழந்தையுடன்  ஐந்து பேரைக்கொண்ட தமிழ் குடும்பம் ஒன்று  தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

தனுஷ்கோடி ஐந்தாம் மணல் திட்டில் கடந்த இரண்டு நாட்களாக தவித்துக்கொண்டிருந்த நிலையில், தமிழக கடலோர காவல் படையினர் அவர்களை மீட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும்  விசாரணையின் பின் மண்டபம் அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக   தெரிவிக்கப்படுகின்றது. மன்னாரை சேர்ந்த ஒருவரே தனது குடும்பத்துடன் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தாம் தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக இவர்கள் விசாரணையின் போது கூறியுள்ளனர்.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையில் 174 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply