இலங்கையில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் பேராசிரியர் சி.பத்மநாதன் –விளக்கவுரை ஒளிப்பட விபரணங்களுடன் (ஆங்கிலத்தில்)

இலங்கைத்தீவில் தமிழரின் தொன்மையையும், அவர்களின் இருப்பையும் தொடர்ந்து மறுதலித்தும் திரித்தும் வரலாற்றை தவறாக சித்தரித்துவரும் பௌத்த-சிங்கள ஆட்சியாளர்கள், இன்றையகாலத்தில் தமிழனின் இருப்புக்கான சான்றுகளை முழுமையாக கைப்பற்றிவிட, அழித்துவிட கங்கணம்கட்டி நிற்கின்றனர்.

தொல் பொருட்களை பாதுகாப்பதற்கான அரசுத் தலைவர் செயலணி என்ற பெயரில் படையதிகாரிகள், தீவீரபௌத்த சிங்கள சிந்தனையாளர்கனான பல பௌத்த பிக்குகள் என்போரை உள்ளடக்கிய குழு தமது அடாத்தான செயற்பாடுகளை ஆரம்பித்து விட்ட நிலையிலும் தமிழ்தேசியவாதிகள் என தம்மைத்தாமே அழைத்துக் கொள்ளும் அரசியல்வாதிகளும், தமிழ்புத்திஜீவிகள், கல்விமான்கள் எனதம்மை அடையாளப்படுத்துவோரும் இந்த நிலைமைகள் தொடர்பில் போதிய அக்கறை காட்டாதிருப்பது மிகுந்த விசனத்துக்குரியது.

நாம் எமது தொன்மையை நன்கு உணர்ந்து கொள்ளவும், அதனை வெளியுலகுக்கு கொண்டு செய்ள்ளவும் இவை போன்ற அறிவுபூர்வமான, ஆதரப்படுத்தப்பட்ட வரலாற்றுச்சான்றுகள் எமக்கு துணைபுரியும்.