வடக்கு கிழக்கில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தல் பெறுபேறு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் அடையாளத்தை எந்த காலத்திலும் விட்டுகொடுக்க முடியாது என்பதன் வெளிப்பாடாகவே இம்முறை தேர்தல் பெறுபேறுகள் அமைந்துள்ளதாகவும் இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்து அரசாங்கம் ஆட்சியமைப்பு 6 மாதங்களில் புதிய மாற்றமொன்று ஏற்பட்டுள்ளது. இதனை வரவேற்கிறோம். அதேநேரம், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என தங்களது தரப்பு கூறியது சரியான முடிவு என்று பலரும் உணர்ந்துள்ளனர் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
அதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும் என்றும் இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



