திருகோணமலையில் ஏழு கோரிக்கைகளை முன்வைத்து அடையாள உண்ணாவிரதம்

IMG 20260726 WA0039 திருகோணமலையில் ஏழு கோரிக்கைகளை முன்வைத்து அடையாள உண்ணாவிரதம்
கடந்த காலத்தில் இந்த அரசாங்கம் சொன்னது என்ன? ஜனாதிபதி தேர்தலில் சொன்னபடி செய்தார்களா என்ற அடிப்படையில் திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்னால் அடையாள உண்ணாவிரதம் நேற்று (26) இடம்பெற்றது.
திருகோணமலை மக்கள் சமூக செயற்பாட்டாளர் உண்ணாவிரத வேந்தன் இதனை ஏற்பாடு செய்தார்.
இதில் பிரதானமாக ஏழு கோரிக்கைகளை முன்வைத்து அதற்கு தீர்வு கோரியும் உண்ணாவிரதம் இருந்தனர்.
IMG 20260726 WA0040 திருகோணமலையில் ஏழு கோரிக்கைகளை முன்வைத்து அடையாள உண்ணாவிரதம்
IMG 20260726 WA0041 திருகோணமலையில் ஏழு கோரிக்கைகளை முன்வைத்து அடையாள உண்ணாவிரதம்
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும், அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட வெடி மருந்து மற்றும் சுருக்கு வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். இதனை தடை செய்ய வேண்டும், அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், செம்மணி மனித புதை குழியில் 500 க்கும் மேற்பட்ட எலும்பு கூடுகள் எடுக்கப்பட்டன. உரிய விசாரணை இதற்காக தேவை இதனை செய்தீர்களா?, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை மந்த கதியில், இது துரித விசாரணை இடம் பெற வேண்டும், வடகிழக்கு உட்பட நாட்டின் அனைத்து மாகாண சபை தேர்தல்களும் இடம் பெற வேண்டும், நாட்டின் அனைத்து பிரதேசத்தையும் போதையற்ற நாடாக மாற்ற வேண்டும். இதனை செய்தீர்களா? என பல்வேறு தரப்பட்ட கேள்விகளை   அரசாங்கத்திடம் கோரிக்கையாக முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.