‘அரசு உடன் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தொடரும்’-சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் உயிரிழந்த தமிழ் மக்களையும், போராளிகளையும் நினைவுகூருவது தமிழ் மக்களின் கடமையும், உரிமையுமாகும் எனத் தெரிவித்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் முக்கியஸ்த்தா் சுரேஸ் பிரேமச்சந்திரன், அதற்கு தடை விதிப்பது தமிழர்களின் உரிமைகளை மறுதலிப்பதாகும், எனவே அரசாங்கம் இந்த தடைகளை அடுத்த சில நாட்களில் அகற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

IMG 7677 'அரசு உடன் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தொடரும்'-சுரேஸ் பிரேமச்சந்திரன்

தியாக திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டமை, மற்றும் சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட அரசின் ஜனநாயக மறுப்பு செயற்பாடுகளை கண்டிப்பதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பின் அழைப்பில், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஜனநாயாக போராளிகள், தமிழ்தேசிய பசுமை இயக்கம் ஆகிய தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் இணைந்து நேற்று நல்லூர் இளங்கலைஞா் மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந் தன. இந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடா்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

தியாகி திலீபனின் நினைவு நாளை அனுஷ்டிப்பதற்கு  விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தும் கோாிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பிவைக்கப்படும். அதற்கு அரசாங்கம் பதிலளிக்க தவறினால் தமிழர் தாயகத்தில் அரசின் செயற்பாடுகளை கண்டித்து தொடா்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

IMG 7675 'அரசு உடன் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தொடரும்'-சுரேஸ் பிரேமச்சந்திரன்

துாதுவா்கள், மனித உாிமை செயற்பாட்டாளர்களுக்கு உண்மை உணர்த்தப்படும்.
தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள், போராளிகள் உயிர் தியாகம் செய்துள்ளனர் அவர்களை அஞ்சலிப்பதும், நினைவுகூருவதும் ஒவ்வொரு தமிழ் மக்களினதும் உாிமையும், கடமையுமாகும்.

அதற்கு எதிராக தடைபோடுவது தமிழா்களின் உாிமையை மறுதலிப்பதாகவே அமையும். எனவே அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் நிரகாிக்கிறது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் இவ்வாறான தடை உத்தரவுகளை நீக்கவேண்டும். திலீபனுக்கு மட்டுமல்லாமல், போராளிகளையும், பொதுமக்களையும் நினைவுகூருவது எங்கள் கடமையும், உாிமையுமாகும். அதனை பயங்கரவாதம் என கூறி தடைசெய்வது ஏற்புடையதல்ல. இன்றைய கூட்டத்தில் சில தீா்மானங்களை எட்டியிருக்கின்றோம். பிரதானமாக தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக நினைவேந்தல்களுக்கு விதிக்கப்படும் தடைகள் நீக்கப்படவேண்டும்.

தமிழ் மக்களின் அடிப்படை உாிமைகளில் கை வைக்ககூடாது. என வலியுறுத்தி ஜனாதிபதிக்கு  கடிதம் எழுதவுள்ளோம். அதற்கு எமக்கு பதில் வழங்கப்படவேண்டும். அரசாங்கம் இதனை செய்யுமா? செய்யாதா? என்பதற்கு அப்பால் எமக்கு பொருத்தமான பதில் வழங்கப்படவேண்டும். இந்த விடயத்தில் பொறுப்பான பதில் வழங்கப்படாவிட்டால், தமிழா் தாயகத்தில் அரசின் செயற்பாடுகளை கண்டித்து தொடா் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். அந்த நிலைக்குள் எங்களை அரசே தள்ளுகின்றது.

IMG 7674 'அரசு உடன் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தொடரும்'-சுரேஸ் பிரேமச்சந்திரன்

இந்த நிலையை நாங்கள் துாதுவராலயங்களுக்கும், மனித உாிமை செயற்பாட்டாளா்களுக்கும் சொல்லுவோம்” என்றாா்.

இதேவேளை, இந்தக் கூட்டத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளாமை தொடா்பாக கேட்டபோது அவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் கலந்துகொள்ளவில்லை. எனினும் இந்த கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக அவர்களுடன் தொடா்ந்தும்பேசுவோம்  என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.