அவுஸ்திரேலியா படையினரை உலுக்கும் தற்கொலை மரணங்கள்

அவுஸ்திரேலிய படைகளில் பணியாற்றுபவர்களும், அதில் இருந்து ஓய்வு பெற்றவர்களும் அதிகளவில் தற்கொலை செய்துவருவதால் அவுஸ்திரேலிய அரசு அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. கடந்த 8 மாதங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் இவ்வாறு மரணமடைந்துள்ளதாக  இது தொடர்பில் அவுஸ்திரேலியா அரசு அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 1200 இற்கு மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளனர். மனஅழுத்தம் மற்றும் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படுதலே தற்கொலைகளுக்கான பிரதான காரணிகளாக தெரிவிக்கப்படுகின்றது.

களமுனைகளில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உளவியல் தாக்கங்களும் அதற்கான காரணிகளாக தெரிவிக்கப்படுகின்றன.

இது தொடர்பில் மன்னிப்புக் கோரியுள்ள அவுஸ்திரேலிய அரசு அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த 20 வருடங்களில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்த்தானில் கொல்லப்பட்ட படையினரை விட தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என அமைச்சர்  மற் கியோவ் தெரிவித்துள்ளார்.