சர்வதேச விண்வெளி நிலையத்தில் திடீர் விபத்து

235 Views

119648094 dock சர்வதேச விண்வெளி நிலையத்தில் திடீர் விபத்து

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) புதிதாக அனுப்பப்பட்ட ரஷ்ய கலன் (module) ஒன்றில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து காரணமாக திடீர் கோளாறு ஏற்பட்டது என்று அதை நிர்வகிப்பவர்கள் தெரிவித்துள்னர்.

இந்தக் கோளாறு கட்டுப்பாட்டுக் குழுவினரால் சரி செய்யப்பட்டது என்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும் நன்றாக இயங்குவதாகவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையான நாசா தெரிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த வேறு ஒரு கலனில் இருந்த உந்துகை கருவிகள் இயக்கபட்ட போது இந்தக் கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது.

இந்த திடீர் விபத்து நிகழ்ந்த போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த ஏழு விண்வெளி வீரர்களுக்கும் ஆபத்து எதுவும் ஏற்படவில்லை என்று அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த குறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வியாழன்று ரஷ்யாவின் ‘நௌகா’ (Nauka) கலன் ஐ.எஸ்.எஸ் உடன் இணைக்கப்பட்ட சில மணி நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

நன்றி – பிபிசி

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply