சுப்பிரமணியன் சுவாமி இன்று இலங்கைக்குப் பயணம்

சுப்பிரமணியன் சுவாமி இன்று இலங்கைக்குப் பயணம்

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி இன்று இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

நவராத்திரி விழாவில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ விடுத்த அழைப்பை ஏற்று  இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக முன்னதாக சுப்பிரமணியன் சுவாமி  தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்ரமணியன் சுவாமியை இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க மற்றும் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் வரவேற்றனர்.

இதேவேளை, இலங்கைக்கு விமானத்தில் வந்துகொண்டிருந்தபோது சுப்ரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவொன்றை இட்டிருந்தார்.

இதேவேளை, இலங்கைக்கு விமானத்தில் வந்துகொண்டிருந்தபோது சுப்ரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவொன்றை இட்டிருந்தார்.

அதில் ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக பிரகடனப்படுத்துவதில் பிரதமர் மோடிக்கு உள்ள தடைகள் என்னவென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad சுப்பிரமணியன் சுவாமி இன்று இலங்கைக்குப் பயணம்

Leave a Reply