வட மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளை இறுதி அறிக்கையில் உள்வாங்குமாறு ஐ.நா அலுவலகத்தில் மனு கையளிப்பு

90 Views

ஜெனிவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 51 ஆவது கூட்டத்தொடரில், அதன் இறுதித் தீர்மான அறிக்கையில் இலங்கையின் வட மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் மற்றும் அபிலாஷைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு யாழ்ப்பாணத்திலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் மனு கையளிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகளின் செயலாளருக்கு பெயரிடப்பட்டு, ஐக்கிய நாடுகளின் யாழ்ப்பாண பிரதிநிதியிடம்  இந்த மனு  சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் செயலாளர் அஷ்ஷெய்க் P.A.S.சுஃப்யான் மற்றும் அமைப்பாளர் A.C.M.கலீல் ஆகியோரால் இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply