கொழும்பு களனி பல்கலைகழக பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டமை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டுள்ளது.
களனி பல்கலைகழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டமை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் அவர்களிற்கு எதிராக சட்டவிரோதமாக ஒன்றுகூடியதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக அறிகின்றோம் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு தெரிவித்துள்ளது.
அமைதியாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிற்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிடவேண்டும் கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரையும் நிபந்தனையுடன் விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை சர்வதேச மனித உரிமை சட்டத்தின் அடிப்படையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமையை மதிக்கவேண்டிய பாதுகாக்கவேண்டிய நிறைவேற்றவேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்குள்ளது எனவும் தெரிவித்துள்ளது.