கோட்டா அரசை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் இன்றும் தொடர்கிறது

கோட்டா அரசை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம்

இலங்கை சந்தித்துள்ள வரலாறுகாணாத பொருளாதார நெருக்கடிக்கு காரணமான கோட்டாபய ராஜபக்சவையும் அவரது தலைமையிலான அரசாங்கத்தையும் பதவி விலக வலியுறுத்தி கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் தன்னெழுச்சியான கோட்டா அரசை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் இன்று (13) புதன் கிழமை ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது.

‘கோ கோம் கோட்டா’ என்ற கோசத்துடன் கடந்த 09 ஆம் திகதி இளைஞர்களால் தன்னெழுச்சியாக ஆரம்பிக்கப்பட்டிருந்த போராட்டம் பல்வேறு தரப்பினரது ஆதரவுடன் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே,  காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக    “Gottagogama” என பெயரிடப்பட்டுள்ள போராட்டக்களத்தில் நூலகம் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது.

குடிநீர், உணவு, மருந்து வகைகள் என்பன தன்னார்வலர்களால் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. நேற்றைய நான்காவது நாள் போராட்டத்தின் போது, மகா சங்கத்தினர், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டக்களத்திற்கு வருகைதந்திருந்தனர்.

இலங்கை வரலாறுகாணாத வகையில் சந்தித்துள்ள பொருளாதார சீர்ழிவுக்கு காரணமான கோட்டா அரசை பதவி விலக வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றைய தினம் 5வது நாளாகவும் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamil News