1714 ம் நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்  

134 Views

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 1714 ம் நாளாக கொட்டும் மழைக்கு மத்தியிலும்  தொடர்கின்றது.

வவுனியாவில் கடந்த 1714 ஆவது நாட்களாக வீதியிலிருந்து போராடி வரும் காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் தமது கோரிக்கையினை முன்வைத்து  இன்றும் போராடி வருகின்றனர்.


தமிழர் தாயகத்தில் சிறீலங்கா இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு, புலனாய்வுத் துறையினர் மற்றும் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் தொடர்ந்தும் சுழற்சி முறையில், தமதுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும் தமது உறவுகளை மீட்டுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து  போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad 1714 ம் நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்  

Leave a Reply