தமிழ்நாடு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாமில் இலங்கைத் தமிழ் அகதிகளும் பங்கேற்கலாம்

இலங்கைத் தமிழ் அகதிகளும் பங்கேற்கலாம்

தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில், 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த கிராமப்புறத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் இலங்கைத் தமிழ் அகதிகளும் பங்கேற்கலாம்.

இதில் இளைஞர்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இலங்கை அகதிகள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமிற்கு வரும் அவர்கள் தங்களது சுய விவரம், ஆதார் அட்டை, அடையாள அட்டையுடன் கலந்து கொள்ள வேண்டும் என மாலைமலர் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இன்று (புதன்கிழமை) ஆற்காடு, திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும், வருகிற 31ம் திகதி வாலாஜா, காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகங் களிலும் நடைபெறுகிறது. வருகிற 6ம் திகதி அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு விழா நடைபெற உள்ளது.

Tamil News