வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் தபால் மூலமாக வாக்களிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சாணக்கியன்

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விரைவில் இரட்டை பிரஜாவுரிமையினை வழங்கி, தபால் மூலமாகவேனும் வாக்களிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில்  உரையாற்றிய  பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,

“அரசாங்கத்திடம் மிக முக்கியமான கோரிக்கை ஒன்றினை இந்த வேளையில் முன்வைக்க விரும்புகின்றேன்.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் பலரும் இரட்டை பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளனர். இரட்டை பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்வது இலகுவாக இருந்தாலும், அதற்கான கட்டணத்தினை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

இலங்கையில் தற்போது டொலருக்கான பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்ற நிலையில், அரசாங்கம் இரட்டை பிரஜாவுரிமைக்கான கட்டணத்தினை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இரட்டை பிரஜாவுரிமையுள்ள அமைச்சர் உள்ள நாட்டில், வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் பலரும் இரட்டை பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளனர்.

எனவே அவர்களுக்கு விரைவாக இரட்டை பிரஜாவுரிமையினை வழங்கி, வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

குறிப்பாக தபால் மூலமாகவேனும் அவர்கள் வாக்களிப்பதற்கு தேவையான நடவடிக்கையினை அரசாங்கம் செய்ய வேண்டும். இதுகுறித்து அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தும் என நம்புகின்றேன்“ என்றார்.

ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் தபால் மூலமாக வாக்களிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் - சாணக்கியன்