வவுனியாவில் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிராக சுவரொட்டிகள்

85 Views

அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிராக சுவரொட்டிகள்

வவுனியாவில் பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகளில் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிராக தமிழ் சிங்களத்தில் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

IMG20211111091602 01 வவுனியாவில் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிராக சுவரொட்டிகள்

அச் சுவரொட்டிகளில் மின்சாரம் எண்ணெய் சுயாதிபத்தியத்தை காட்டிக்கொடுக்கும் திருட்டு ஒப்பந்தத்தை இரத்து செய், அமெரிக்க – சீன – இந்திய மரணப்பொறியில் மக்களை சிக்கவைக்கும் ஏகாதிபத்திய சார்பு ஆட்சிக்கு எதிராவோம். போன்ற அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிராக சுவரொட்டிகள் வாசகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சுவரொட்டிகளுக்கு தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் மற்றும் முன்னிலை சோஷலிஸக் கட்சி  என்பன உரிமை கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply