திபெத்திய ஏதிலிகளுக்கு சமமாக இலங்கை தமிழர்கள் நடத்தப்பட வேண்டும்- இந்தியாவிற்கு மனோ எம்.பி கோரிக்கை

506 Views

WhatsApp Image 2021 08 23 at 7.06.01 PM 1 திபெத்திய ஏதிலிகளுக்கு சமமாக இலங்கை தமிழர்கள் நடத்தப்பட வேண்டும்- இந்தியாவிற்கு மனோ எம்.பி கோரிக்கை

சிறப்பு முகாம்களில் வாழும் இலங்கை அகதிகளை, திபெத்திய அகதிகளுக்கு சமமாக நடத்தி, இந்திய குடியுரிமை வழங்கி முகாம்களுக்கு வெளியே இயல்பு வாழ்க்கை வாழும் படி செய்ய வேண்டும் என இந்திய ஒன்றிய அரசை கோருகிறேன் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியியின் தலைவருமான மனோ கணேசன் தனது சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் தம்மை விடுதலை செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இருந்த போதும் அவர்களின் கோரிக்கைகளுக்கு இது வரையில் இந்திய மத்திய மற்றும் தமிழக அரசு எந்த பதிலையுமோ அல்லது வாக்குறுதிகளையோ வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply