கடன் வழங்கிய நாடுகளின் நிதி உத்தரவாதங்களை இலங்கை விரைவில் பெறும்-IMF

இலங்கை தனக்கு கடன்வழங்கிய நாடுகளின் நிதிஉத்தரவாதங்களை விரைவில் பெற்றுக்கொள்ளும் என சர்வதேச நாணயநிதியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணயநிதியத்தின் ஆசிய பசுபிக்கிற்கான தலைவர் கிருஸ்ணா ஸ்ரீனிவாசன் இதனை தெரிவித்துள்ளார்.

நிதி உத்தரவாதங்களை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இலங்கையர்கள் மேற்கொள்கின்றனர் சர்வதேச நாணயநிதியத்தை சேர்ந்த நாங்கள் அனைத்து மட்டத்திலும் அவர்களிற்கு உதவுகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இந்த உத்தரவாதங்களை பெற்றதும் சர்வதேச நாணயநிதியத்தின் பணிப்பாளர் சபையை நோக்கி செல்ல முடியும் என்பதே இடம்பெறக்கூடிய சிறந்த விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவிடமிருந்து எங்களிற்கு கிடைக்ககூடிய உத்தரவாதத்தை பெறமுடியும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் இது நாங்கள் பணிப்பாளர் சபையை நோக்கி செல்வதற்கான வாய்ப்பை வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீனாவின் உத்தரவாதம் இல்லாமல் சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு நிதிஉதவியை வழங்கலாம் என வெளியான தகவல்களை அவர் ஊகங்கள் என தெரிவித்துள்ளார்.