“வடக்கு ,கிழக்கு பகுதிகளை  சீனாவின் மேற்பார்வைக்குள் இலங்கை கொண்டு வரக்கூடாது”-பேராசிரியர் இராமு. மணிவண்ணன்

10 1439195543 ramumanivannan 600 “வடக்கு ,கிழக்கு பகுதிகளை  சீனாவின் மேற்பார்வைக்குள் இலங்கை கொண்டு வரக்கூடாது”-பேராசிரியர் இராமு. மணிவண்ணன்

யுவான் வாங் 5 என்ற சீனாவின் கண்காணிப்பு கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரவிருப்பது தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.

காரணம், இந்து மகாசமுத்திரத்திற்குள் இந்த கப்பல் வருவது இலங்கையின் நட்பு நாடான இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என   எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை பல்கலைக்கழகததின் ஓய்வு பெற்ற பேராசிரியர் இராமு. மணிவண்ணன் அவர்களை இலக்கு ஊடகம் செவ்வி கண்ட போது,

கேள்வி   :-

யூவான் யங் 5  கப்பலின் இலங்கை பயணம் தொடர்பில் இந்தியா ஏன் அச்சம் கொண்டுள்ளது?

”இது ஒரு புவிசார் அரசியல் ரீதியாகவும் அதோடுமட்டுமல்லாமல் கடந்த ஏழு ,எட்டு மாதங்களாக இலங்கையின் பொருளாதாரம் மற்றும் ஒட்டுமொத்த அரசியலும் ஒரு மிகப்பெரிய அழுத்தத்திற்குள் இருந்த ஓர் அரசியல்  சூழ்நிலையில் இந்தியா மிகப்பெரிய ஒரு  ஈடு செய்ய முடியாத அளவுக்கு உதவி செய்த பிறகும் கூட புவிசார் அரசியல் ரீதியாக இலங்கையின் ஊடலாக அச்சுறுத்தல்கள் குறைய வேண்டும் என்ற தான் இந்தியா எப்பொழுதும் எதிர்ப்பாக்கின்றது. அந்த நிலைப்பாட்டின் படி பார்க்கும் பொழுது சீனாவும் இலங்கையும் அவர்களுடைய நிலைப்பாட்டை எப்பொழுதும் மாற்றிக் கொள்ளாமல் இலங்கை குறிப்பாக வந்து அவர்கள் பொருளாதாரத்தை மீளுகின்ற ஒரு சூழலில் வரும் பொழுது சீனாவிடம் இருந்து இத்தகைய ஒரு இராணுவ ரீதியான கப்பல்கள் இலங்கையை வந்தடையும் போது இந்தியா நிச்சயம்  கவனத்தில் இருப்பதோடு அதோடு மட்டுமல்லாமல் ஒரு மிக முக்கியமான நடவடிக்கைகளை கவனிப்பதும்    அரசியல் ரீதியாக அல்லது இராணுவ ரீதியாக கூட அதற்கான ஒரு ஆயத்தங்களை மேற்கொள்ளுவதும் அவசியமாகின்றது.

இந்த சூழலை இலங்கை,  இந்தியாவிற்கு உருவாக்காது என்ற மிகப்பெரிய நம்பிக்கையில்,   இந்தியா மிகப்பெரிய அளவில் பொருளாதார ரீதியாக இலங்கைக்கு உதவி செய்த பிறகும் இலங்கை  சீனாவுடன் சேர்ந்த திரும்பவும் அவர்கள் கொண்டு வருவது என்பது  நாம் எதிர்ப்பார்ப்பது தான்.இலங்கையை பொறுத்தவரை சீனாவுடனான உறவு. ஆனால் இந்தியாவிற்கு வந்து இத்தகைய நடப்புகள் தவிர்க்கலாம் என்று தான் இந்தியா எதிர்ப்பார்க்கின்றது. இலங்கையிடமிருந்து”.

கேள்வி :-

இந்த கப்பலின் பயணத்தை இந்தியாவினால் தடுக்க முடியாது போனால் அதனை  இந்தியா எவ்வாறு எதிர்கொள்ளும் ?

”இந்தியா இந்த பயணத்தை இலங்கை தவிர்க்க வேண்டும் என்பதோடு ஒருபக்கவாதம் அதோடுமட்டுமல்லாமல் அதை தடுக்க வேண்டும் என்பது கூட இரண்டாவது மிக முக்கியமான ஒரு எதிர்ப்பார்ப்பாகும். ஆனால் இலங்கையை பொறுத்தவரையில் வந்து இந்தியாவுடனான ஒரு நட்பு நாடு என்றவொரு பார்வையில் இருந்தாலும் அல்லது அரசியல் ரீதியாகவும் அதையும் கடந்து இலங்கையின் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இந்தியாவின் ஊடலாக அல்லது இந்தியாவை ஒரு முக்கியமான நாடாக இலங்கை பார்க்குமாயின், இத்தகைய ஒரு நடவடிக்கைகள் இலங்கை மேற்கொள்ளாது. ஆனால் இலங்கையை பொறுத்தவரையில் வந்து வெளிநாடுகளில் இருந்து எந்தவிதமான இராணுவ ரீதியான அறிவுறுத்தல்களும் அவர்களுக்கு கிடையாது அல்லது நடைபெறாது என்ற சூழலில் சீனாவுடன் ஒரு இராஜதந்திர உறவு என்பதை விட புவிசார் அரசியலுக்கான சீனாவின் புவிசார் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்ய கூடியவொரு அல்லது குறைந்தபட்ச ஒரு எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றும் நாடாக இலங்கை செயல்ப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இந்தியப் பெருங்கடலிலும் ஆபிரிக்கா மற்றும் ஏனைய நாடுகளுக்கான  மிக முக்கியமான கப்பல் வழிப்பயணத்தின்  ஒரு முக்கியமான இருப்பிடமாகவும் போக்குவரத்து அல்லது இராணுவ ரீதியான ஒரு கட்டமைப்புகளை நடத்துவதற்கும் கூட இலங்கை மிகப்பெரிய ஒரு முக்கியமான தளமாக பார்க்கப்படுகிறது.

ஆதலால் இந்தியாவிடமிருந்து இலங்கை என்ன எதிர்ப்பார்க்கின்றதோ, அது பொருளாதாரம் ஆகட்டும் நட்பு ரீதியாகட்டும் அல்லது தெற்காசியப் பிராந்திய அரசியல் ரீதியாக இந்தியாவிற்கான முக்கியத்துவம் ஆகட்டும், ஆனால் இலங்கை  சீனாவும் கூட நிறைய எதிர்ப்பார்ப்புகளை வைத்திருக்கின்றது. பொருளாதார ரீதியான எதிர்ப்பார்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும்  புவிசார் அரசியல் ரீதியாக இந்தியா இலங்கையை கையாளுவதை விட சீனா இலங்கையை மிகப்பெரிய சாதுரியமாக கையாண்டுக்கொண்டிருக்கிறது. அதற்கான ஒரு உரிய விலையை காலம்காலமாக இலங்கை கொடுத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு விலை என்ற நிர்ணயம் என்பது சீனாவும் அதற்கு விலை என்ற பொருளாதார கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டாலும் கூட ஆனால் இலங்கைக்கு  இந்தியா செய்கின்ற உதவியானது சமீபகாலமாக குறைந்தபட்சம் ஆறு மாத காலமாக இந்தியா செய்கின்ற ஈடுசெய்ய முடியாத மிகப்பெரிய பொருளாதார உதவி என்று சொன்னாலும் கூட,  ஆனால் ஒரு மீளமுடியாத பொருளாதார மூழ்கும் நிலையில் இருக்கின்ற இலங்கைக்கு அதே நிலையில் இருந்து மீள வேண்டும் என்றால் சீனாவிடம் இருந்துதான் அந்த பொருளாதார உதவியும் அந்த பொருளாதாரத்திற்கான தயவுகளும் வேண்டி நிற்கின்றது இலங்கை. ஆதலால் இலங்கைக்கு புவிசார் அரசியலும் ஒரு நீண்டகால ஒரு ஆழமான பொருளாதார மீட்புப்பணியில் செய்யவேண்டுமானால் சீனாவின் நட்பும் மிகமிக அவசியமாகும். சீனாவின் நட்பு என்று பார்க்கும் பொழுது அது இராணுவ புவிசார் அரசியல் சார்ந்த நட்பே முக்கியமாக”.

கேள்வி :-

இலங்கையின் இவ்வாறான நடைவடிக்கைகளை தடுக்க முடியாத இந்தியா தனது பாதுகாப்புக்காக வடக்கு கிழக்கு மாகாணங்களையாவது தக்க வைக்க முயலும?

“நிச்சயமாக     இலங்கையில் சீனாவின் ஊடுறுவல் என்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பது எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. அதேபோல்   இலங்கையில் சீனாவின் மிகப்பெரிய பொருளாதார முன்னெடுப்புகள் அல்லது கட்டமைப்பு ரீதியாக பிறகு இராணுவ ரீதியான புவிசார் ரீதியான முன்னெடுப்புகள்   இந்தியாவிற்கு தொடர்ந்து கவனத்தையும் கவலையையும் உருவாக்க கூடிய சூழல் தான் . இதை எவ்வாறு இந்தியா அரசியல் ரீதியாகவும் முக்கியமாக புவிசார் அரசியல் ரீதியாகவும் ஈடு செய்ய வேண்டும் எனின் அதை வடக்கு கிழக்கு பாதுகாப்பு என்பது,இலங்கையில்  தென்பிராந்திய மத்திய பகுதிகள் என்று சொல்லும் போது கொழும்பு துறைமுகம்,  அம்பாந்தோட்டை துறைமுகம் இவற்றைப் பற்றி நாம் சிந்திக்கின்றோம். இவற்றையும் கடந்து வடக்கு, கிழக்கு பகுதிகளில் திருகோணமலை ஆகட்டும் முக்கியமான பிரதான துறைமுகமாகட்டும், யாழ்ப்பாண மற்ற பகுதிகள் ஆகட்டும் இவற்றின் பாதுகாப்பும் கூட.

இவை அனைத்துமே இலங்கை அரசியல் சூழல் ஊடாக சீனாவின் கட்டுப்பாட்டுக்கு போககூடாது என்பது இந்தியா கவனமாக இருக்கும். ஆனால் இது இலங்கை எவ்வளவு தூரத்திற்கு இந்தியாவின் நம்பிக்கைக்கும் வார்த்தைக்கும் கட்டுபட்டு இருக்கும் என்பதை நாம் சொல்ல முடியாது.

நான் இவ்வாறு இரண்டு விதமாக பார்க்கிறேன். ஒன்று வந்து இலங்கை வடக்கு, கிழக்கு பகுதிகளில் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள்ளும், தெற்கு , மத்திய பகுதிகளைச் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள்ளும் பிரதானமாக நான் சொல்லுவது துறைமுகங்களை. இவ்வாறு இரண்டு பகுதிகளையும் சீனாவிற்கும் ,இந்தியாவிற்கும் பிரித்து கையாளக்கூடிய ஒரு ஆளுமையை அல்லது கட்டுப்பாட்டிற்குள் என்று சொல்லும் போது எழுதாத உடன்படிக்கையாக நடைபெறுமானால்   இந்தியா,  சீனா என்ற நிலைப்பாட்டிற்கு இலங்கை அத்தகைய ஒரு அரசியல் சூழலுக்குச் செல்லக்கூடும். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை வடக்கிலும் கிழக்கிலும் பிரதான ஒரு ஆளுமையாக இருந்தாலும் சீனாவுக்கு எந்தவிதமான அச்சுறுத்தல் கிடையாது . ஆனால் சீனா தெற்கிலும் மத்தியிலுமாக அது அம்பாந்தோட்டவாக இருக்கட்டும் மற்ற கொழும்பு துறைமுகமாகட்டும் அங்கு பிரதானமாக துறைமுகங்களை கையாளும் போது ஆளுமைக்குள் இருக்கும் பொழுதும் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் இருக்கத்தான் செய்யும். ஆதலால் இந்தியா அடிப்படையான இந்தச் சீனாவின் அச்சுறுத்தல்  இலங்கையின் மூலமாக இருக்கவே கூடாது என்றுதான் ஒரு எண்ணமாகும். அதை திருத்திக் கொள்வதற்கு இந்தியா தொடர் அழுத்தங்களை அரசியல் ரீதியாகவும் தெற்கு பிராந்திய அரசியல் ரீதியாகவும் ,பொருளாதார ரீதியாகவும் அதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் செயல்பட வேண்டும் என்று நினைக்கின்றேன் . அதோடுமட்டுமல்லாமல் வடக்கு ,கிழக்கு பகுதிகளை எந்தவொரு காலகட்டத்திலும் எத்தகைய நிலையிலும் இலங்கை சீனாவின் மேற்பார்வையில், சீனாவின் ஒரு ஆளுமைக்குள் கொண்டு வர கூடாது என்பது இந்தியா நிச்சயம் கவனத்தில் கொண்டிருக்கும் அதற்கான ஒரு எதிர்நிலை முன்னெடுப்புகளை இந்தியா எதிர்க்க தயங்காது என்று நினைக்கின்றேன். அதை எதிர்க்க வேண்டும் என்பது தான் எங்களுடைய எண்ணம்”.