ஜெனீவா அமர்வில் தென்னாபிரிக்காவின் ஆதரவை கோரியது இலங்கை

181 Views

தென்னாபிரிக்காவின் ஆதரவை கோரியது இலங்கை

தென்னாபிரிக்காவின் ஆதரவை கோரியது இலங்கை: தென்னாபிரிக்காவிற்கான இலங்கை தூதுவர் சிறிசேன அமரசேகர, தென்னாபிரிக்க அதிகாரிகளுடனும் நமீபியா சிம்பாப்வே மலாவி உட்ளிட்ட நாடுகளின் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகளின் போது, வெளிதரப்பினரால் திணிக்கப்படும் பொறிமுறைகளை விட உள்நாட்டு மோதல்களிற்கு தீர்வை காண்பதற்கு உள்நாட்டு பொறிமுறைகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மோதலின் பின்னர் இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிவாரணத்தை வழங்குவதற்காக அனைத்தையும் செய்துள்ளது என தெரிவித்துள்ள தூதுவர், தேவையற்ற சர்வதேச அழுத்தங்கள் காரணமாக அரசாங்கம் தன்னிடம் உள்ள சிறியஅளவு வளங்களை தியாகம் செய்வதற்கும் தற்பாதுகாப்பு நிலையில் செயற்படுவதற்கும் தள்ளப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சர்வதேச தரப்பினர் தமிழர் விவகாரங்களில் நேர்மையான அக்கறை கொண்டிருந்தால் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிவாரணத்தை வழங்கும் அரசாங்கத்தின் முயற்சிகளிற்கு உதவவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சம்மந்தப்பட்ட தரப்பினர் தங்களின் தவறுகளை திருத்திக்கொள்ளாவிட்டால் பொறுப்புக்கூறல் என்பது அர்த்தமற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆதாரமற்ற இட்டுக்கட்டப்பட்ட கதைகளில் தங்கியிருக்காமல் பரந்த கண்ணோட்டத்தில் இந்த பிரச்சினையை பார்க்குமாறு அவர்அழைப்பு விடுத்துள்ளார்.

Tamil News

Leave a Reply