பாண்டியர் காலத்து நாணயக் குற்றிகள், இலங்கையின் வடக்கு மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மன்னார் – நானாட்டான் பிரதேசத்தில் உள்ள அல்பேர்ட் என்பவருக்குச் சொந்தமான காணியில், வீடு ஒன்றை நிர்மாணிக்கும் பொருட்டு, நிலத்தைத் தோண்டியபோது இந்த நாயணக்குற்றிகள் கிடைத்துள்ளன.
இந்த நாணயங்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதாகவும், 1904 நாணயக் குற்றிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாகவும் மன்னார் – நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளர் பி. புவனம் பிபிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நானாட்டான் பிரதேச சபை உப தவிசாளர், அந்த நாணயங்களை முருங்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். தற்போது அந்த நாணயக்குற்றிகள் அனைத்தும் மன்னார் நீதிமன்றின் ஊடாக, தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முருங்கன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லயனல் தெரிவித்துள்ளார்.