வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரரின் விளக்கமறியல் நீடிக்கப்படக்கூடாது – சர்வதேச மன்னிப்புச் சபை!

216 Views

பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் 90நாட்கள் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்தியத்திற்கான ஆய்வாளர் தியாகி ருவன்பத்திரன வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரின் தடுத்து வைக்கும் உத்தரவு மேலும் நீடிக்கப்படக் கூடாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply