இலங்கை : ஊரடங்கு சட்டத்தால் முடங்கிய மட்டக்களப்பு

357 Views

முடங்கிய மட்டக்களப்பு

முடங்கிய மட்டக்களப்பு: இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஊரடங்கு சட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை முதல் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

நேற்று மாலை 06மணி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்கு சட்டத்தினை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. நேற்று மாலை மட்டக்களப்பு நகர் உட்பட பல்வேறு இடங்களில் ஊரடங்கு சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பணிகளில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

மட்டக்களப்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதுடன் காவல்துறையினர்  சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவருகின்றனர்.

இதேநேரம் நேற்று மாலை ஊரடங்கு சட்டத்தினையும் மீறி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெருமளவான மக்கள் கூடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply