ஊரடங்கு சட்டம் : வவுனியாவில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு

காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு

இலங்கையில்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக வவுனியா நகரம் முழுமையாக முடங்கியுள்ளதுடன்,  காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வியாபார நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளதுடன், வீதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

IMG 5851  ஊரடங்கு சட்டம் : வவுனியாவில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு

காவல்துறையினர், இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், வீதியால் செல்லும் வாகனங்கள், மோட்டர் சைக்கிள்களை வழிமறித்து  காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொள்வதுடன் அனுமதியின்றியும், அத்தியாவசிய தேவையின்றியும் பயணிப்பவர்களை எச்சரித்து  காவல்துறையினர் மீள அனுப்பி வருகின்றனர்.