332 Views
இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறி நடமாடிய குற்றச்சாட்டில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை (02) இரவு 10.00 மணி முதல் இன்று ஞாயிற்றுக் கிழமை (03) 06.00 மணி வரையான 8 மணித்தியால காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
நேற்று சனிக்கிழமை மாலை 06.00 மணி முதல் நாளை திங்கள் கிழமை காலை 06.00 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.