நெடுந்தீவு அருகே தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேர் கைது

273 Views

தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேர் கைது


யாழ்ப்பாயணம் நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லைதாண்டி மீனிபிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று ஞாயிற்றுக் கிழமை (03) நெடுந்தீவு கடற்பரப்பில் கடல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரால் அப்பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லைதாண்டிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.

இவ்வாறு நெடுந்தீவு கடற்பகுதியில் எல்லைதாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த 12 மீனவர்களை அவர் பயன்படுத்திய விசைப்படகு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டி மீவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tamil News

Leave a Reply