பாரதிய ஜனதா கட்சியினர் ஆட்சியில் உள்ள தென்னிந்திய மாநிலமான கர்நாடாகாவில் முஸ்லீம் மாணவிகள் பர்தா அணிவது தடை செய்யப்பட்டதை தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் நீதி வழங்குவதில் உயர் நீதிமன்றம் முரண்பட்ட கருத்துகளை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வழக்கு தொடர்பில் அமைக்கப்பட்ட நீதிபதிகளை கொண்ட குழுவில் பல கருத்து முரண்பாடுகள் தோன்றியுள்ளன. தமக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக முஸ்லீம் மாணவிகளும், பெற்றோர்களும் போராடி வருகையில் அவர்களுக்கு எதிராக பாரதியா ஜனதா கட்சியை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து தமக்குள் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளதால் பல நீதியாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும் எனவும், ஆனால் அது எப்போது அமைக்கப்படும் என தாம் இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் நீதிபதி ஹெமந் குப்தா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 1.4 பில்லியன் மக்கள் தொகையில் முஸ்லீம் மக்கள் 14 சதவிகிதமாகும். இந்துக்களை அதிகமாக கொண்ட இந்தியாவில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் இடம்பெறுவதுடன், அவர்களின் உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.