வவுனியாவில் எரிவாயு தட்டுப்பாட்டினால் வெதுப்பகங்கள் சில பூட்டு

எரிவாயு தட்டுப்பாட்டினால் வெதுப்பகங்கள் பூட்டு

வவுனியாவில் இயங்கி வருகின்ற வெதுப்பகங்கள் சில எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ளதுடன் இதனால் பல தொழிலாளர்கள் வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வவுனியா நகரின் குட்செட் வீதி மற்றும் பட்டானிச்சூர் ஆகிய பகுதிகளில் இயங்கி வருகின்ற இரண்டு வெதுப்பகங்கள் இன்று (27.04) முதல் மூடப்பட்டுள்ளது.

இதனால் வாடிக்கையாளர்கள் உட்பட தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எரிவாயு தட்டுப்பாடு நீங்கிவிட்டதாக அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படுகின்ற போதும் எரிவாயு விநியோக நிலையங்களில் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் மக்களுக்கு எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil News