காவல்துறை அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு
ரம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்த கட்டளையிட்ட கேகாலை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட காவல் அத்தியட்சகரையும் துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய காவல்துறை உத்தியோகத்தர்களையும் கைது செய்யுமாறு கேகாலை நீதவான் பொலிஸ் மா அதிபருக்கு இன்று உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கேகாலை நீதவான் வாசனா நவரத்ன இந்த உத்தரவை பிறப்பித்தார்.
ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின் போது உயிரிழந்த நபர் துப்பாக்கி பிரயோகத்தின் போது ஏற்பட்ட காயம் காரணமாகவே உயிரிழந்தமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு இன்று அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.