இலங்கை நெருக்கடிக்கு தீர்வு: மாணவர் ஒன்றியத்தின் முன்மொழிவுகள்

இலங்கை நெருக்கடிக்கு தீர்வு

‘இலங்கையில் தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வுகள்’ எனும் தலைப்பில் 13 முன்மொழிவுகளை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ளது.

இந்த நிகழ்வில், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பல முக்கியஸதர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, வடக்கு கிழக்கு தமிழர்களுக்கான அரசியல் தீர்வு இதில் உள்ளடக்கப்பட வேண்டுமென அங்கு பேசிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வலியுறுத்தினார்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு இல்லாத எதிர்காலம் இலங்கைக்கு கிடையாது என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்

Tamil News