இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த குற்றச்சாட்டில்  இலங்கை மீனவர்கள்   கைது

இலங்கை மீனவர்கள் கைது: இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் நாகை மாவட்டம் கொடியகரை அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்ததாக குற்றம் சுமத்தி இலங்கை மீனவர்கள் 6 பேர் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை இந்திய கடற்படையினர் காரைக்கால் தனியார் துறைமுகம் கொண்டு  சென்று விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அவர்கள் அனைவரையும் நீதி மன்ற நடவடிக்கைக்காக காவல்துறையினரிடம் கையளிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகின்றது.

Tamil News