2000ம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்து அரசர்களின் கல்லறைகளில் 8 முறை பொறிக்கப்பட்ட ஒரு தமிழ் பெயர், இன்று தமிழர்களின் பழமையைப் பறைசாற்றும் ஒரு வரலாற்றுச் சான்றாக மாறியுள்ளது. சிகை கொன்றன் என்ற அந்த பெயர் தமிழர்களின் வரலாற்றை மீண்டும் ஒரு முறை சர்வதேச கவனற்றிற்கு எடுத்து சென்றுள்ளது.
சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்தின் புகழ்பெற்ற ‘வேலி ஆஃப் கிங்ஸ்’ (Valley of Kings) பகுதியில் உள்ள கல்லறைகளில் சிகை கொன்றன் என்ற பெயருடைய தமிழரின் பெயர் பொறிக்கப்பட்ட தமிழ்-பிராமி கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் பேராசிரியர்களால் கண்டறியப்பட்ட இந்த எழுத்துக்கள், பண்டைய தமிழர்களின் சர்வதேச வணிகத் தொடர்பையும், எகிப்திற்கான பயணத்தையும் உறுதிப்படுத்துகின்றன.
எகிப்தின் லக்ஸர் பகுதியில் உள்ள கல்லறைகளின் சுவர்களில் “சிகை கொற்றன் வர கண்ட” (Cikai Korran varak kanta) போன்ற வாசகங்கள் தமிழ்-பிராமி எழுத்துக்களில் உள்ளன. சிகை கொற்றன் என்ற பெயர் 5 வெவ்வேறு கல்லறைகளில் 8 முறை செதுக்கப்பட்டுள்ளது, இது ஒரு தமிழன் அங்கு வந்து சென்றதை உறுதி செய்கிறது. இவை பொது ஆண்டு (CE) முதலாம்-மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என கணிக்கப்பட்டுள்ளது.
சாத்தன், கீரன் போன்ற பெயர்களும் கண்டறியப்பட்டுள்ளன. இது பண்டைய தமிழர்கள் எகிப்துடன் நெருங்கிய வணிகத் தொடர்பில் இருந்ததை நிரூபிக்கிறது.



