ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி வேண்டி கையெழுத்து போராட்டம்

245 Views

IMG20210723094414 01 ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி வேண்டி கையெழுத்து போராட்டம்

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்து மரணமடைந்த சிறுமிக்கு நீதி வேண்டி வவுனியாவில் கை எழுத்துப் போராட்டம் ஒன்று இன்று  இடம் பெற்றது.

சுயாதீன தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம் பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த ஏற்பாட்டாளர்கள்,

ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி வேண்டி குறித்த கை எழுத்துப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம். நாடு முழுவதும் சிறுவர், சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். அவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. அவர்கள் பணி செய்யும் பகுதிகளில்  பல்வேறு துஸ்பிரயோகங்களிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக  ஹிஷாலினியின் மரணத்துடன் தொடர்பு பட்டவர்கள் தண்டிக்கப்பட்டு நீதி நிலை நாட்டப்பட வேண்டும்.

அத்துடன்  சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர் களையும், தரகர்களையும் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என்றனர். குறித்த கையெழுத்து பிரதிகள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப் படவுள்ளமை குறிப்பிடத் தக்கது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply