இலங்கையில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் இன்று வரை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளே பெரும்பாலான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் பின்னணியில் இருப்பதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.